Monday, 31 October 2011

போர்க்களத்தில் சாய்ந்தால் கூட ( சவால் சிறுகதை 2011 )


ழுத்தை அறுக்கும்போது கத்தாதே. வலி அதிகமாகும்”  யாரோ சொன்னார்கள். “ ஒன்றும் கவலைப்படாதே. வலிக்காமல்தான் அறுப்பேன்புன் சிரிப்புடன் கோகுல் தீப்தியை நெருங்கினான்.
கையில் வாள் பளபளத்த்து. “ கூர் தீட்டி இருக்கிறேன். எளிதாக முடிந்து விடும்சொன்னபடியே அவள் தலையை பீட்த்தில் வைத்தான். பயத்துடன் கண்களை சுழ்ற்றி பார்த்தாள். நண்பர்கள், உறவினர்கள் என அனைவரும் கண்ணீருடன் பார்த்துக் கொண்டிருக்க, அவன் வாள் ஓங்கினான். ஒரே வெட்டில் தலை துண்டாக்கும் வேகத்துடன் வாள் கீழே இறங்கி அவள் கழுத்தை முத்தமிட,  ”அய்யோஓஓஓஓஒஅலறினாள் அவள்.
ப்படித்தான் சார். டெய்லியும் என்னவோ கனவு கண்டு தூக்கத்துல கத்துறா, முழுசா தூங்கி ரொம்ப நாள் ஆச்சு.” தோழிகள் முறையிட்டனர். அவள் ஹாஸ்டலுக்கு நான் அடிக்கடி வந்து போவதால் அவள் தோழிகள் எனக்கு நல்ல பழக்கம்.
சரி.. நான் வெயிட் செய்றேன். அவளை வர சொல்லுங்க. கீதா, அவளை ப்ளூ சேலை கட்டி அனுப்பி வைங்ககுறும்புடன் சொன்னேன். “ சரிங்கண்ணாஅவள் சிரிப்புடன் சொல்லி துள்ளி குதித்து ஓடினாள்.
அவள் வருகைக்காக காத்து இருந்தேன்.
புன்னகைத்துக் கொண்டேன். காத்திருத்தலில்தான் எங்கள் காதல் ஆரம்பித்த்து.
      பெங்களூர். பைக்கில் க்வீன்ஸ் ரோட்டில் விரைந்து கொண்டு இருந்தேன். யாரோ ஒரு பெண் லிஃப்ட் கேட்டு கை உயர்த்தினாள். தென்னிந்திய பெண் தான். 20 வயதுக்குள் இருக்கும். ஆடம்பரம் சற்றும் இன்றி எளிமையான அழகுடன் இருந்தாள்.
நிறுத்தினேன்.
கன்னட்த்தில் என்னவோ சொன்னாள். அவள் அவசரமாக இண்டர்வியூ செல்ல வேண்டும். அவள் கைனடிக் ஹோண்டா என்னவோ பிரச்சினை ஆகி விட்ட்து என புரிந்து கொண்டேன்.  . உடனே முடுவெடுத்து, அவள் பைக்கை அருகில் இருந்த வொர்க் ஷாப்பில் விட்டுவிட்டு , அவளையும் அழைத்துக்கொண்டு சென்றேன்.
எனக்கும் அதே பில்டிங்கில் வேறொரு  நிறுவன இண்டர்வியூ. விரைவிலேயே முடிந்து விட்ட்து. பைக்கை ஸ்டார்ட் செய்தவன் சற்று  நிதானித்தேன்.
ஒரு பெண்ணை கூட்டி வந்தோமே. அவள் பைக்கை ஒரு வொர்க் ஷாப்பில் விட்டோம். அது எனக்கு தெரிந்த வொர்க் ஷாப். அவள் சரியாக கண்டு பிடித்து சென்று விடுவாளா? அவசரத்தில் அட்ரஸ் கூட வாங்கி கொள்ள வில்லை லோக்கல் பெண்ணாக இருந்தால் பரவாயில்லை. வெளி ஏரியா பெண் என்றால் கஷ்டம் .
வெயிட் செய்யலாமா? முன் பின் தெரியாத ஒருவன் அவளுக்காக காத்து இருந்தால் தவறாக எடுத்துக் கொள்வாளோ?
பரவாயில்லை. வெயிட் செய்யலாம். நம் உதவி தேவைப்பட்டால் செய்யலாம். இல்லை என்றால் ஒன்றும் பாதகமில்லை.
கிரம் நாவல் ராஜேஷ் குமாரை மேய்ந்தபடி காத்து இருந்தேன்.
சார் நீங்க தமிழா? “ அவள் குரல் கேட்டு நிமிர்ந்தேன்.
ஆமா மேடம்.. நீங்களும் தமிழா..குட். அந்த வொர்க் ஷாப் போன் நம்பர் , அட்ரஸ் எதுவும் உங்களுக்கு நான் தரல. அதுதான் வெயிட் செய்றேன்என்றேன் நான்.
சோ நைஸ் ஆஃப் யூ சார். உள்ளே போனப்புறம்தான் எனக்கும் அது தோணுச்சு. இவ்வளவு நேரம் வெயிட் செஞ்சதுக்கு நன்றி சார். தப்பு என் மேலதான். நான் அப்பவே டீட்டயில் வாங்கி இருக்கணும்என்றாள்.
சரி..வாங்க. அந்த வொர்க் ஷாப்ல டிராப் செஞ்சுடுறேன். அந்த வழியாத்தான் போறேன் . பை என் பேரு விஷ்ணு . உங்க பேரு ?“ தீப்தியை  அழைத்துக் கொண்டு வொர்க் ஷாப்  சென்றேன்.

வாழ்க்கையின் பல நல்ல விஷயங்கள் எதிர்பாராமல்தான் கிடைக்கின்றன. அவளை சந்தித்த்து எதிர்பாராமல் நடந்த நல்ல விஷ்யம். அவள் வண்டிக்காக வொர்க் ஷாப்பில் காத்து இருந்த போது பேச வாய்ப்பு கிடைத்த்து இன்னொரு நல்ல விஷ்யம்.
அவள் அருகில் இருக்கும் ஒரு ஹாஸ்டலில்தான் தங்கி இருக்கிறாளாம். அல்சூர் விவேகான்ந்தர் ஆஸ்ரமத்திற்கு தியானம் செய்ய வருவாளாம்.
அட நானும் அடிக்கடி  வருவேனே
இப்படி விழுந்த  நட்பு விதை , செடியாகி மரமாகி பூத்து குலுங்க ஆரம்பித்த்து. இலக்கியம், அரசியல், சினிமா என எல்லாம் பேசுவோம். நட்பின் எல்லையை இருவரும் தாண்டியது இல்லை.
தலைவர் ரஜினி இந்த ஊர்கார்ர்தான் தெரியுமில்லை. எனக்கெல்லாம் அவர் பாட்டுத்தான் டானிக் மாதிரிஒரு நாள் உற்சாகமாக சொன்னேன்.
எனக்கும் ரஜினி பாட்டு ரொம்ப பிடிக்கும். குறிப்பா தளபதில ஒரு பாட்டு ..”
எது. ராக்கம்மா கைய தட்டுதானே..”
இல்லை ..எனக்கு அதை விட சுந்தரி..கண்ணால் ஒரு சேதி பாட்டு பிடிக்கும்.


வாள் பிடித்து நின்றால் கூட
நெஞ்சில் உந்தன் ஊர்வலம்
போர்க்களத்தில் சாய்ந்தால் கூட
ஜீவன் உன்னைச் சேர்ந்திடும்ராகத்துடன் அருமையாக பாடிக்காட்டினாள். பாடும்போது அவள் கண்கள் லேசான கண்ணீரில் பளபளத்தன.
எந்த அளவுக்கு அஃபெக்ஷன் பார்த்தீங்களா? காதலை விட உயர்ந்த விஷ்யம் என்ன இருக்கு? காதல் என்பதை உணராமல் , ஆன்மீகம் மெடிடேஷன் என்பதையெல்லாம் உணர வாய்ப்பில்லைனு நினைக்கிறேன்
அவள் பேசுவதை பிரமிப்புடன் கேட்டேன். ஒரு பெண் இந்த அளவுக்கு தெளிவாக அழகாக பேசி நான் கேட்ட்தில்லை
இவ்வளவு சொல்றியே.. நீ யாரையாவது லவ் பண்றியா? “
காதல் எனும் உணர்வுக்கு , காதலனோ காதலியோ கூட தேவையில்லை. அந்த உணர்வுதான் முக்கியம். ஒரு வேளை அப்படி ஒருவர் கிடைத்தால் சந்தோஷம்நான் இதுவரை எனக்கான ஆளை பார்க்கவில்லை. பார்த்து விட்டால், அவரை அப்ப்டியே கொத்தி கொண்டு சென்று விடுவேன்புன்னகைத்தாள்.
நீ மட்டும் பார்த்தால் போதாது. அவரும் உன்னை பார்த்து , அவர்க்கு தகுந்த துணை நீதான் என நினைக்கணும். அதுதான் காதல். அண்ணல் நோக்கினான். அவளும் நோக்கினாள். இதில் காதல் இல்லை. அண்ணலும் நோக்கினான். அவளும் நோக்கினாள். இதுதான் காதல். என்ன சொல்றஎன்றேன் நான்.
நான் என்ன சொல்றேனா… “  வெட்கத்துடன் ஆரம்பித்தாள்.
என்ன ..சொல்லு
நானும் உன்னை நேசிக்கிறேன். நீயும் என்னை நேசிக்கிறே.. ஆனால் இருவரும் சொல்லாம இருக்கோம்
அவள் இதை சொன்னபோது எனக்கு ஏற்பட்ட பரவசத்தை எந்த மொழியிலும் எழுத முடியாது.
அவள் கைகளை காதலுடன் பற்றிக்கொண்டேன்

இருவரும் சொல்லாம இருக்கோம்னு சொல்றது தப்பு.. இருவரும் இதை இத்தனை நாள் சொல்லிக்கிட்டேதான் இருக்கோம். அதை இருவரும் கேட்டுக்கிட்டும் இருக்கோம். ஆனால் வெளிப்படையா இன்னிக்குதான் சொல்றோம்
ரவுக்கு பின் பகல். பகலுக்கு பின் இரவு என்பது நியதி. மகிழ்ச்சிக்குப்பிறகு  சோதனை என்பதும் நியதிதான். அது யார் மூலம் வரும் என்பது மட்டும் யாருக்கும் தெரியாது.
எங்கள் வாழ்வில் இப்படி சோதனையாக வந்தவன் தான், சின்ன பாளையம் கோகுல் எனும் எஸ் பி கோகுல்.
எப்போதும் உற்சாகமாக இருக்கும் அவள் கொஞ்ச நாட்களாக ஏதோ ஒரு கவலையில் இருப்பது தெரிந்த்து. வற்புறுத்தி கேட்ட்தும் சொன்னாள்.
ஊழியர் ஒருவர் திருமணத்துக்காக பஸ்சில்  சென்று கொண்டு இருந்தோம். கடுமையான தாகம். குளிர்ச்சியாக ஏதாவது சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
எக்ஸ்கியூஸ் மீ மேடம்மெல்லிய குரல் கேட்டு நிமிர்ந்தேன்.
மெலிதான தேகம். 22 வயது மதிக்கத்தக்க இளைஞன். கண்ணாடி அணிந்து இருந்தான், கனவில் மிதப்பது போன்ற அமானுஷ்யமான கண்கள். கூரிய மூக்கு. என்னவோ தெரியவில்லை. அவனைப் பார்க்கவே  ஒரு வித பயமாக இருந்த்து. என் அலுவலகத்தில் வேலை செய்பவன் என்றாலும் பேசியதில்லை
ஹாய். ஆம் கோகுல், எஸ் பி கோகுல். யு லுக் டைர்ட், கோக் சாப்பிறீங்களா? “ நீட்டினான்.
அட தேவை அறிந்து தருகிறானேவாங்கி அருந்தினேன். .
தேங்க்ஸ்
இது போன்று அடிக்கடி சிறு சிறு உதவிகளை நான் கேட்காமலேயே செய்ய ஆரம்பித்தான். அதுவும் அவை மிகவும் தேவைப்படும் நேரங்களில். அவன் குறிப்பறிந்து உதவுவது தற்செயலா அல்லது வேறு ஏதாவதா? லேசான சந்தேகம் வந்த்து

     அவ்னை புரிந்து கொள்ள முடியவில்லை. மிகவும் சாதுவாக இருக்கிறான். என் மனம் அறிந்து நடக்கிறான். என்னிடம் என்ன எதிர்பார்க்கிறான்.
 ஊரில் இருந்து அப்பா போன் செய்து இருந்தார். “ அக்காவுக்கு ந்ல்ல இடம் அமைந்து இருக்குமா. அடுத்த மாசமே கல்யாணம் வச்சுக்கலாம். பணம்தான் கொஞ்சம் தேவைப்படுது. எங்கேயாச்சும் லோன் கிடைக்குமானு பாரு
யாரிடம் கேட்பது?
குழம்ப்பிக்கொண்டிருந்த நிலையில்தான் , கோகுல் வந்தான்.
மேடம், யூ லுக் வொர்ரீட். னி ஃபினான்சியல் பிராப்ள்ம். கேன் ஹெல்ப் யூ
என்னால் பொறுக்க முடியவில்லை.
சார், நீங்க யாரு. என் மனசை உங்களால் எப்படி படிக்க முடியுது?
அவன் கோணலாக சிரித்தான்.
உங்க மனசை படிப்பது பெரிய விஷயமில்லை. உங்க அப்பா மனசை படிக்க முடியலையே. சில அமானுஷ்ய சக்திகள் குறித்த ஓலை சுவடிகள் என்னிடம் இருக்கு. ஆனால் இதற்கான சில முக்கிய குறியீட்டு சொற்கள் அவரிடம் இருக்கு. அது எனக்கு வேணும். “
இதுதான் என் குழப்பத்துக்கு காரணம். அது என்ன ஓலைச்சுவடி. என்ன குறியீடு ? “
இதெல்லாம் சுத்த பேத்தல்என்னை உன் அப்பாவுக்கு அறிமுகப்படுத்தி வை. இதை நான் டீல் பண்றேன். இந்த அறிமுகம் நம்ம மேட்டருக்கும் யூஸ் ஆகும்.”
அவள் தந்தையை பார்த்து பேசினேன்
தம்பி , மாந்திரீகம் , மனோவசியம் என்பதெல்லாம் பெரிய கலைகள். ஆனால் தவறான ஆட்கள் கைகளுக்கு இது போய்ட கூடாது. குறிப்பா அந்த கோகுல் கைகளுக்கு போய்ட கூடாது. உங்களை நம்பி இதை தறேன். அவனிடம் இருக்கும் ஓலை சுவடிகளை கைப்பற்ற முடிஞ்சா, இதை பயன்படுத்தி நீங்க நல்லது செய்யலாம். நானும் கைட் பண்றேன்
என்ன சார். குறியீடு ஆங்கிலத்துல இருக்கு?”
எல்லாம் ஒரு வசதிக்காகத்தான். ஆனால் இதை தமிழ் எழுத்து வடிவுலதான் பயன்படுத்தணும். உதாரணமா எஸ் யூயூ என்ற மந்திர சொற்கள் s w என ஆங்கிலத்தில் இருக்கும்
ஹலோ கோகுல் .என் பேரு விஷ்ணு. நீங்க தேடுற குறியீடு என்னிடம்தான் இருக்கு. அந்த ஓலைசுவடிகளை என்னிடம் காட்டுனீங்கனா, குறியீட்டை தர தயார்
கோகுல் சிரித்தான்
சார், முதலில் அதை கொடுங்க.. செக் பண்ணி பார்த்துட்டு, சுவடியை காட்டுறேன்..”
சரி. மெயில் பண்றேன்
மெயில் பறந்த்து
மிஸ்டர் கோகுல் S W H2 6F  இதுதான் குறியீடு . கவனம்விஷ்ணு

ஆனால் இதற்கு பிறகு கோகுலுடன் பேச நேரமில்லை. தீப்தியின் அக்காவுக்கு திடீரென வலது கையில் பிரச்சினை. அசைக்கவே முடியவில்லை என்றாள். திருமணம் நின்று விட்ட்து
இன்னுமொரு அதிர்ச்சியாக, தீப்தியின் அப்பா, வாக்கிங் சென்ற போது, கார் மோதி மரணமடைந்தார்.
அடுத்தடுத்த சோதனைகள். கோகுலை மறந்தே போனேன்.
தீப்தியை கூட கொஞ்ச நாளாக பார்க்கவில்லை. அவள் பிரச்சினையில் இருக்கிறாள் என கேள்விப்பட்டு இப்போது ஹாஸ்டல் வந்து இருக்கிறேன்
ப்ளூ சேலையில் , நீல வான ஓடையில்  நீந்துகின்ற வெண்ணிலவாக ஹாஸ்டலுக்கு வெளியே வந்தாள்.
 “ என்னடா செல்லம். கனவு பிரச்சினையாமே? “
ஆமாம்பா. அந்த கோகுல் தான் இத்தனைக்கும் காரணம்னு நினைக்கிறேன்
சரி வா. அவன் ரூமுக்கு போகலாம். அவன் ஊர்ல இல்லைனு கேள்விப்பட்டேன்
ஒதுக்குப்புறமான ஒரு பகுதியில் அவன் அறை இருந்த்து. அறைக்கு வெளியே ஒரு பயங்கரமான தெய்வம் ஒன்றின் கோயில் இருந்த்து. வாஸ்து, சாஸ்திரங்கள் போன்றவற்றுக்கு நேர் விரோதமாக இருந்த்து.
பூட்டை தட்டினோம். வெகு எளிதாக கழண்டு கொண்ட்து.
உள்ளே நுழைந்த்துமே, மேஜையில் இருந்த மண்டை ஓட்டை பார்த்து தீப்தி அலறி விட்டாள்.
எனக்குமே சற்று திகிலாக இருந்த்து.
விஷ்ணு..இங்கே பாருங்க
பார்த்து அதிர்ந்தேன்
கார் ஒன்றின் முன்பு, தீப்தியின் அப்பாவை போல தோன்றும் பொம்மை கட்டப்பட்டு இருந்த்து.
அவளின் அக்கா பொம்மையின் வலது கை முறுக்கப்பட்டு இருந்த்து.
வெல்கம் ஃப்ரெண்ட்ஸ்கோகுல் திடீரென உள்ளே வந்தான்.
எல்லாம் பார்த்தாச்சா. முட்டாள்தனமா போலீசுக்கு போய் நான் தான் தீப்தியோட அப்பாவை கொன்னேனு சொல்ல மாட்டீங்கனு நினைக்கிறேன். மாந்திரீகமெல்லாம் எந்த கோர்ட்லயும் நிக்காது. ஹா ஹா. “
ஹேய் உனக்கு என்ன வேணும்தீப்தி வீறிட்டாள்.
நான் கேட்ட்தை உன் அப்பா தரல. தப்பான குறியீட்டை தந்து ஏமாத்திட்டான் இந்த விஷ்ணு. அவன் எனக்கு அனுப்பிச்ச மெயில், அது தப்புனு உங்க அப்பாவுக்கு அனுப்பிச்ச மெயில் , இரண்டும் அந்த மேஜைல கிடக்குது பார்.
போகட்டும்., என் பூஜைகளுக்கு உன் போன்ற அழகிய பெண் தேவை. ஒத்துழைப்பு கொடுத்தா ராணி மாதிரி வச்சி இருப்பேன். காதல் கீதல்னு உளறாதே. காதல்னு ஒன்றும் இல்லை. எல்லாம் ஹார்மோன் விளையாட்டுதான். அன்பு என்பதும் இல்லை. ஒரு வசதிக்காகத்தான் உறவுகள். உன் அப்பாவுக்கு உன் மேல உண்மையிலேயே அன்பு இருந்து இருந்தா, செத்த்துமே ஆவி ரூபத்துல வந்து ன் நெற்றியை ஓர் அடி அடிச்சா போதும். நான் அழிஞ்சிருப்பேன். ஃபிசிக்கலா என்னை கொன்னாலும் ஆவி ரூபத்தில் என்னால் இயங்க முடியும். ஆனா ஆவி நிலையிலயும் அன்பை மறக்காத ஒரு ஜீவனால என்னை முழுசா அழிக்க முடியும்ஆனா உங்கப்பா உன்னை மறந்துட்டாரு.. இனி யாரையும் நம்பாதே .”
மேஜையில் இருந்த இரு துண்டு சீட்டுகளையும் பார்த்தபடி நான் சோகமாக அமர்ந்து இருந்தேன். தீப்தியின் போன் மேஜையில் இருந்த்து. ஆனால் போலீசுக்கெல்லாம் போன் செய்து பயனில்லை
அறையில் ஓடிக் கொண்டு இருந்த தொலைக்காட்சியின் ஃபிளாஷ் நியூசை பார்த்த அவள் முகம்  நிறமிழந்த்து. என்னை திகிலுடன் பார்த்துக் கொண்டே
“. கம் ஃபாஸ்ட்அலறினாள்.
ஓடினேன்.
இவன் நெத்தியில் ஓர் அடி விடு
கேள்வி கேட்காமல் ஓர் அடி வைத்தேன். அவன் சுருண்டு விழுந்தான்
மேஜையில் நான் வைத்து இருந்த தீப்தியின் போன் சிணுங்கியது.
 நாற்காலியில் அமர்ந்த்து , போனை எடுத்தேன்.
விஷ்ணு இன்ஃபார்மர் காலிங்.( நீ தகவல் களஞ்சியம்பா. அதுதான் இந்த பெயர் வச்சேன் )

நான் இங்கு இருக்கும்போது என் நம்பரில் இருந்து கால் வருகிறதே.
எடுத்து காதில் வைத்தேன்.
ஹலோ. மனதை திடப்படுத்திக்கோங்க இங்கே விஷ்ணுனு ஒருவர் பைக் ஆக்சிடண்ட் ஆகி ஸ்பாட்லயே இறந்துட்டாரு. அவர் போன்ல உங்க நம்பர் இருந்த்து
அதிர்ந்தேன்.  
அட ஆமா..
அவளைப்பார்க்க பைக்கில் கிளம்பிய நான், பைக் இல்லாமல்தானே அவள் ஹாஸ்டலை அடைந்தேன்?
விதான சவுதா எதிரே நடந்த விபத்து என்பதால் ஃப்ளாஷ் நியூசில் என் மரணத்தை காட்டி இருக்கிறார்கள். அதனால்தான் அவளுக்கு தெரிந்திருக்கிறது
உண்மை புரிந்த்து
எப்படியோ. ஒரு தீய்வனிடம் இருந்து அவளை காப்பாற்றி விட்டேன். காற்றில் கரைய ஆரம்பித்தேன். அவள் அழுகை சத்தமும் காற்றில் கலந்த்து.6 comments:

Unknown said...

நல்ல இருக்கு....வாழ்த்துக்கள்.
அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..
http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

நம்பிக்கைபாண்டியன் said...

கடைசியில் காப்பாற்றியது ஆவியாய் இருக்கும் காதலன், கதையில் நல்ல திருப்பம், வெற்றிக்கு வாழ்த்துக்கள்

Radhakrishnan said...

மிகவும் வித்தியாசமான பாணியில் சொல்லப்பட்டு இருக்கிறது. வாழ்த்துகள். நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

வெற்றிக்கு வாழ்த்துக்கள்

middleclassmadhavi said...

உங்கள் முதல் கதையை இரண்டாவதாகப் படித்து விட்டேன்! இதுவும் வித்தியாசமான கதை! கதைகளுக்காகவே இந்த வலைப்பூ தொடங்கி எழுத ஆரம்பித்திருக்கிறீர்கள்! மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்!
ஓட்டுகளும் போட்டாச்சு!

நம்பிக்கைபாண்டியன் said...

போட்டியில் ஆறுதல் பரிசு பெற்றதற்கு இனிய வாழ்த்துக்கள்!

Post a Comment